புந்தர் விமான நிலையம் அல்லது குலு மணாலி விமான நிலையம் குலு சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாக 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா, சண்டிகர், பதான்கோட், தரம்சாலா, மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் குலு சுற்றுலாத்தலத்தை அடையலாம். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக அருகில் டெல்லி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.