Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்

37

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.  ஸ்ரீ கம்பஹரேஸ்வரரைத் தரிசிக்க ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

இக்கிராமத்தில் வேறு பல கோவில்கள் இருந்தாலும் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம்தான் மிகப் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். 13ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன்.

அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள்  கருதுகின்றனர். இதுவொரு சிவாலயமாகும்.

இக்கோவிலின் முன்பகுதியானது ஒரு 120 அடி உயரமுள்ள ஒரு ரதத்தினை ஒத்துள்ளது. ரதத்தின் சுவர்கள் மற்றும் கோவிலின் சுவர்களில், ராமாயணத்தில் வரும் காட்சிகள் ஓவிங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

பிரம்மாண்டமான வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் அழகையும் இக்கோவிலில் உள்ள கற்களில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகளையும், இங்குள்ள ஓவியங்களின் வனப்பையும் கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை புரிகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed