மஹாலச கோயில் அல்லது மஹாலச நாராயணி கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் 1565ம் ஆண்டு பய் குடும்பத்தாரால் தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.
குரவ் எனும் அர்ச்சகரால் இந்த கோயில் கட்டப்பட்டதாகவும் அவர் கோவாவிலுள்ள வெர்ணாவிலிருந்து இங்குள்ள வெண்கல சிலையை கொண்டுவந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு மண்குடத்தில் வைத்து கொண்டுவரப்பட்ட இந்த விக்கிரகம் இங்கு கருவறையில் அர்ப்பணம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த கோயிலின் பிரதானக்கடவுள் (மூலவர்) ஷீ மஹாலச நாராயணிக்கடவுளாய் இருந்தபோதிலும் லட்சுமி நாராயண், கிராம்புருஷ், ஷன்டேரி, தத்சங்கர், பஹவதி மற்றும் காலபைரவர் போன்ற இதர கடவுள்கள் மற்றும் தேவியரின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன.
இங்குள்ள சந்தியா மண்டபத்தில் ஒரு அற்புதமான மரச்சிற்ப குடைவு வேலைப்பாட்டை பயணிகள் பார்க்கலாம். சுண்ணாம்புக்கலவையால் வரையப்பட்ட சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணங்கள் கொண்ட ஓவியங்களையும் இங்கு பார்க்க முடிகிறது. இவற்றில் ராமாயண மற்றும் மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.இந்த கோயிலில் பல திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சிரவண மாச எனப்படும் திருவிழா கடைசி ஞாயிறன்று நடத்தப்படுகிறது. இதர திருவிழாக்களாக பூர்ணிமா, தசமி மற்றும் வத்யா பத்யா போன்றவற்றை குறிப்பிடலாம்.
இது தவிர மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த கோயிலின் அஸ்திவாரத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கும்டாவிற்கு வருகை தரும் பயணிகள் நேரம் இருந்தால் இந்த கோயிலுக்கு வருகை தருவது நல்லது.



Click it and Unblock the Notifications