Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூடுமலை » ஈர்க்கும் இடங்கள் » விநாயகர் கோயில்

விநாயகர் கோயில், கூடுமலை

6

கூடுமலையின் விநாயகர் கோயில் இரண்டு வெவ்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. இதை பழங்காலத்தில் கட்டிடக் கலையில் சிறந்த நிபுணராக விளங்கிய ஜனாக்சாரி என்பவரும் அவர் மகன் தக்கனாசாரி என்பவரும் சேர்ந்து வடிவமைத்துள்ளனர்.கோயிலின் கட்டிட வடிவமைப்பும், கோயில் சுவர்களில் காணப்படும் சின்னங்களும் இது விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.

இதன் விநாயகர் சிலை பதிமூன்றரை அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணுவும், அழிக்கும் கடவுளான சிவனும், உருவாக்கும் கடவுளான பிரம்மாவும் இணைந்து விநாயகர் சிலையை கூடுமலையில் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மும்மூர்த்திகள் இங்கு விநாயகருக்கு பூஜை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

எனினும் இந்த சிலையை யார் இங்கு பிரதிஷ்டை செய்தார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரம் ஏதும்  இல்லை. கிருஷ்ணதேவராயர் இந்த விநாயகர் சிலைக்கு கோயில் எடுக்கும் வரை இது பல ஆண்டுகள் திறந்த பரப்பிலேயே இருந்தது. இங்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் லட்சக் கணக்கான மக்கள் அண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue