கூடுமலையில் உள்ள முக்கியமான கோயில்களில் சோமேஸ்வரா ஆலயமும் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இது விநாயகர் கோயிலை விட பழமையானது.
இந்த கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதன் சிவலிங்கம் பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் சக்தி படைத்ததாக நம்பப்படுகிறது.
கோயிலை சுற்றிலும் நிறைய கல்வெட்டுக்களும், சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களை எல்லாம் விநாயகர் ஆலய பணிகளை செய்த மகா கலைஞர் ஜனாக்சாரியும் அவர் மகன் தக்கனாசாரியுமே வடித்துள்ளனர்.
கோயில் முழுவதையும் அஸ்த்திவாரமே இல்லாமல், கற்பாறைகளை குடைந்து உருவாக்கியுள்ள பாங்கு கட்டிடக் கலையின் உச்சம் என்றே சொல்லலாம்.



Click it and Unblock the Notifications