Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஷிநகர் » ஈர்க்கும் இடங்கள் » குஷிநகர் அருங்காட்சியகம்

குஷிநகர் அருங்காட்சியகம், குஷிநகர்

21

1992-93-ல் கட்டப்பட்ட குஷிநகர் அருங்காட்சியகம், பெரும்பாலும் புத்தருடைய வாழ்க்கை மற்றும் காலத்துடன் தொடர்புடைய பொருட்களையே கொண்டுள்ளதால் புத்தர் அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நகரம் புத்தர் வந்தது மற்றும் தன்னுடைய போதனைகள் செய்தற்காக மட்டும் புகழ் பெறவில்லை, இங்குதான் புத்தர் தன்னுடைய பூவுடலை விட்டு விட்டு, மகாபரிநிர்வாணம் அடைந்தார்.

குஷிநகர் அருங்காட்சியகம் அந்நகரத்தின் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்காக 1 கிமீ தொலைவிலும் மற்றும் மகாபரிநிர்வாணா கோவிலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் காசியா பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இது ஒரு மையமான அமைவிடமாக இருப்பதால் புனிதப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் செல்ல ஏற்ற இடமாகவும் உள்ளது.

குஷிநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடிய தொல்பொருள் கலைப்பொருட்களை கொண்டுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

இந்த அருங்காட்சியகத்தின் முக்கியமான கலைப்பொருட்களாக 248 கலைப்பொருட்கள் உள்ளன. புத்தருடைய மட்பாண்ட சிலைகள், சிற்பங்கள், அந்த காலகட்டத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், வெண்கல சிலைகள், தன்காஸ் என்ற பேனர் ஓவியங்கள், களிமண் இலச்சினைகள், நாணயங்கள், செங்கற்கள் மற்றும் பல கலைப்பொருட்களை கொண்டுள்ள இடமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.

கௌதம புத்தர் தியானம் செய்வது போன்று அமர்ந்திருக்கும் சிலைதான் இந்த அருங்காட்சியகத்தின் முதன்மையான அம்சமாகும். இந்த சிலை காந்தாரக்கலையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri