Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஷிநகர் » ஈர்க்கும் இடங்கள் » பவாநகர்

பவாநகர், குஷிநகர்

21

பவாபுரி என்றும் அழைக்கப்படும் பவாநகர், பகவான் மாகவீரர் நிர்வாணமடைந்த பூமியாக கருதப்படுகிறது. இது குகுஷிநகரில் இருந்து 22 கிமீ கிழக்காக தேசிய நெடுஞ்சாலை எண் 28-ல் உள்ளது.

இந்நகரம் பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் ஆகிய இரு பிரிவினருடனும் தொடர்புள்ள இடமாகும். சமண மத ஏடுகளின் படி, 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் தனது பூவுடலை விட்டு, கி.மு.543-ம் ஆண்டில் நிர்வாணமடைந்த இடமாக இது நம்பப்படுகிறது.

இந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் ஒரு கோவிலும் இங்கு கட்டப்பட்டிருக்கிறது. இதில் பிரமிக்கவைக்கும் வகையில் ஒரு மனஸ்தம்பாவும் மற்றும் கலைநயத்துடன் செதுக்கப்பட்ட சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

பௌத்த மத ஏடுகளின் படி, வைசாலியிலிருந்து குசிநகரம் செல்லும் வழியில் புத்தருடைய சீடர் கொடுத்த சுகராமட்டவா (Sukaramaddava) என்ற காளான் உணவை புத்தர் ஏற்றுக் கொண்ட இடமாகவும் இது உள்ளது.

வரலாற்று நினைவுச் சின்னங்களுடன் இருக்கும் இந்த நகரம் சமணர்கள், பௌத்தர்கள்  மற்றும் சாதாரண சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் வருகை புரியும் இடமாக உள்ளது.

பகவான் மகாவீரர் நிர்வாணம் அடைந்ததை குறிப்பிட்டுக் கொண்டாடும் நிர்வாணா மஹோத்சவம் நடக்கும் கார்த்திகை பூர்ணிமா மற்றும் தீபாவளி நாட்களில் நடக்கும் நாட்களில், இங்கு நடத்தப்படும் ஊர்வலத்தில் உலகெங்கிலும் இருந்து வந்த சமணர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வது வழக்கம்!

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed