பீம் பகோரா, லாண்ஸ்டவுனில் உள்ள `காந்தி சவுக்' இல் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்து இதிகாசமான மஹாபரத்தின் படி, பஞ்ச பாண்டவர்கள் தங்களது வனவாசத்தின் போது இங்கு உணவு சமைத்ததாக நம்பப்படுகிறது.
இங்குள்ள மக்கள், பாண்டவர்களில் ஒருவரான பீமன், ஒரு கல்லின் மீது மற்றொரு கல்லை வைத்து உணவு தயாரித்ததாக நம்புகின்றனர். இதற்கு வலு சேர்க்கும் விதமாக மேலே உள்ள கல் எப்போதும் சீராக உள்ளது. மேலே உள்ள கல்லை, நாம் ஒரு விரல் கொண்டு நகர்த்தலாம். ஆனால், இக்கல் ஒரு போதும் கீழே விழுவதில்லை.



Click it and Unblock the Notifications