மாஹே – அரபிக் கடலின் புருவம்!

மாஹே, தென்னிந்தியாவிலுள்ள, மைய அரசின் எல்லைக்குட்பட்ட பகுதியான, பாண்டிச்சேரியில் அமைந்துள்ள, ஒரு சிறு நகரமாகும். சுமார் 9 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள மாஹே, அதன் மூன்று பக்கங்களிலும் கேரள மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது. அதனால், இங்கு வழங்கப்படும் மொழி மற்றும் சமையற்கலையில் கேரள ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.

சுமார் 35,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், சுமார் 98.35% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளதனால், இது, நாட்டிலேயே, அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட முனிசிப்பாலிட்டிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்நகரம், அந்நியரான பிரெஞ்சு ஆட்சியின் கீழ், 1954-ம் வ்ருடம் வரை இருந்துள்ளதனால், இங்கு பிரெஞ்சு கலாச்சாரத்தின் மிச்சங்களை, பொதுமக்கள் சிலரிடையேயும், கட்டுமானங்கள் சிலவற்றிலும் காணலாம். 1855-ம் வருடம் கட்டப்பட்டுள்ள அரசு விடுதி, இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

இந்நகரின் பிரெஞ்சு வம்சாவளியினர்

இந்தியாவில், பிரெஞ்சு கொள்கையின் முக்கிய வடிவமைப்பாளராக இருந்த, பெர்ட்ராண்ட் ஃப்ரான்காய்ஸ் மாஹே டி லா பௌர்டோன்னாய்ஸ் –சின் பெயரிலேயே இந்நகரம் அழைக்கப்படுகின்றது.

இப்பெயர் தோன்றிய விதம் பற்றி இரு வேறு விதமான கூற்றுகள் உலவுகின்றன. முதல் கூற்றின்படி, இப்பெயரில் உள்ள ஒரு பிரெஞ்சு மனிதரை கௌரவிக்கும் வகையில், இந்நகர் இவ்வாறு பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது கூற்றின்படி, கவுன்ட் டி லா பௌர்டோன்னாய்ஸ், ஏற்கெனவே இவ்வாறு வழங்கப்பட்டு வந்த இந்நகரின் பெயரையே, தான் வைத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

மாஹே மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

மாஹே பள்ளி என்றழைக்கப்படும் தேவாலயம், இதன் சுற்றுப்புறங்களில் வாழ்ந்து வரும் கிறித்தவர்கள், மத வழிபாடு செய்யும், மிகப் பிரபலமானதொரு தலமாகும். விசைப்படகுகள், பெடல் படகுகள், மற்றும் காயக் என்றழைக்கப்படும் பனிக் கடற் படகுகள், ஆகியவற்றாலான மாஹே படகு வீடுகள், இங்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கியமான அம்சங்களாகும்.

இந்த அமைதியான இயற்கை வனப்பு மிக்க பகுதியைக் கண்டு ரசிக்க, வருடந்தோறும், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

மாஹே செல்வதற்கு ஏற்ற காலகட்டம்

மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலம், மாஹே சென்று வருவதற்கு ஏற்ற காலகட்டமாகும்.

மாஹேவை அடைவது எப்படி?

மாஹே, நாட்டிலுள்ள பிற முக்கிய நகரங்களுடன் வான், இரயில் மற்றும் சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம், நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...