அஹில்யேஷ்வர் கோயில், மஹேஷ்வரில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள மற்றுமொரு கோயிலாகும். புனிதமான நர்மதா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ராமபிரானின் திருவுருவச்சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அஹில்யேஷ்வர் கோயில் மஹேஷ்வரில் உள்ள கோயில்களின் குணநலன்களையும் எடுத்து இயம்பக்கூடியதாகக் காணப்படுகிறது. இக்கோயிலின் நேர்த்தியான வேலைப்பாடுகள், கலசங்கள் மற்றும் கோபுரக்கூம்புகளின் கட்டுமான பாணிகள் ஆகியவை இதற்கு சான்றாகத் திகழ்கின்றன.
இக்கோயில் வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மராட்டிய வீரர்கள் மற்றும் யானைகளின் அழகிய சிற்பங்கள் இக்கோயிலுக்கு வருகை தரும் எந்தவோர் பயணியையும் வசீகரிக்கக்கூடியனவாக உள்ளன.
இக்கோயில் மண்டபம் பிரமிப்பூட்டும் அலங்காரத்துடன் ஜொலிக்கின்றது. இக்கோயிலின் ஒட்டுமொத்த சூழலும், முக்கியமாக புனித நதியான நர்மதாவுக்கு அருகில் உள்ள இதன் அமைப்பு, அமைதி மற்றும் தூய்மையை பிரதிபலிக்கக்கூடியதாக விளங்குகிறது.
அஹில்யேஷ்வர் கோயிலின் தரிசன நேரம் காலை 7 மணி முதல் மாலை 6:30 மணி வரை ஆகும். மேலும், ஆரத்திகள் காலையில் 8 மணிக்கும், மாலையில் 6 மணிக்கும் நடைபெறுகின்றன.



Click it and Unblock the Notifications