ஜலேஷ்வர் கோயில் மஹேஷ்வரில் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட முக்கிய கோயிலாக கம்பீரமாக நிற்கின்றது. இக்கோயில் நீருக்கான தெய்வத்தை மூலவராகக் கொண்டுள்ளது.
கங்கை நதி சுவர்க்கத்தில் இருந்து விழுந்தபோது உண்டாகக்கூடிய பாதிப்புகளிலிருந்து சிவபெருமான் உலகைக் காத்த வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்கும் வண்ணம் ஜலேஷ்வர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
ஒரு லிங்கத்தின் உறைவிடமாக விளங்கும் இக்கோயில், பல காலமாக மக்கள் வழிபட்டு வரும் சிவபெருமானின் புகழை பறைசாற்றுகின்றது. சுற்றுலாப் பயணிகள் இக்கோயிலுக்கு வருவதன் மூலம் தங்கள் நேரத்தை உத்தரவாதமாக பயனுள்ள வகையில் கழிக்கலாம்.
உயரமான கோபுரக் கூம்புகளை உடைய இதன் கட்டுமானம் சந்தேகத்துக்கு இடமின்றி முன்மாதிரியான ஒன்றாகக் காட்சியளிக்கிறது. இங்கு காணப்படும் சிலை வடிவங்கள் அனைத்தும் மிகவும் நளினமாகக் காட்சியளிக்கின்றன.
கவிந்தவாக்கில் செதுக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் இதற்கு விதிவிலக்காக அமைந்து இக்கோயிலுக்கு வித்தியாசமான ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. இக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் நீருக்கான தெய்வமாகக் காட்சியளிக்கும் சிவபெருமானை உளமார வணங்கக்கூடிய வகையில் அமைதியான சுற்றுச்சூழல் அமையப்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications