புனிதமான நர்மதா நதியின் வடக்குக் கரையில் அமைந்துள்ள காலேஷ்வர் கோயில் 12 ஆம் நூற்றாண்டு ஏடியைச் சேர்ந்த ஒரு சிறு கோயிலாகும். இங்கு வழிபடப்படும் தெய்வமான காலேஷ்வர், அழிவைத் தள்ளி வைக்கக்கூடிய கடவுளான சிவபெருமானின் வடிவமாகக் கருதப்படுகிறார்.
ஒரு உயரமான நடைமேடையில் அமைக்கப்பட்டுள்ள காலேஷ்வரின் இந்த அற்புதமான கோயில், தகதகவென மின்னும் சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான கோயிலாகக் காட்சியளிக்கிறது.
இங்கு மேல்நோக்கி அமைந்திருக்கும் சுருள் வடிவிலான கலசங்களை எடுப்பாகக் காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ள செங்குத்தான வடிவங்களை சுற்றுலாப் பயணிகள் நன்கு பார்க்கலாம்.
கண்களை வருடும் பச்சை பசேல் என்ற சுற்றுப்புறச் சூழலைக் கொண்டுள்ள இக்கோயில் வளாகம், பக்தர்களுக்கு நிறைவான தெய்வீக உணர்வை அளிக்கக்கூடியதாகத் திகழ்கிறது.
சிவபெருமானின் அழிக்கும் அவதாரம் இங்கு வழிபடப்பட்டு வருவதால் இக்கோயில் மஹேஷ்வரில் உள்ள இதர கோயில்களில் இருந்து தனிப்பட்டு விளங்குகிறது.
இக்கோயில், அதன் உட்புறங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பசுமையான சூழல் போன்ற அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை பூரணமாக கவர்ந்திழுக்கக்கூடியனவாக உள்ளன.



Click it and Unblock the Notifications