மால்ஷேஜ் காட் மலைஸ்தலம் தன் ரம்மியமான இயற்கை அழகுகளுக்காகவே புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள மால்ஷேஜ் நீர்வீழ்ச்சி இந்த பிரதேசத்தில் எழில் வாய்ந்த ஸ்தலங்களில் ஒன்றாகும்.
மழைக்காலத்தின்போது பாறைகளில் வழிந்து புரளும் நீர்ப்பெருக்குடன் இந்த மால்ஷேஜ் நீர்வீழ்ச்சி ஒரு சொர்க்கலோகம் போன்று காட்சியளிக்கின்றது. நீரின் பிரவாகமும் மழைக்காலத்தின் அழகும் இந்த சூழலையே ஒரு வண்ண ஓவியம் போன்று தோற்றமளிக்க வைக்கின்றது.
ஊர் திரும்பிய பின்னரும் என்றும் உங்கள் நினைவில் நிலைத்திருக்கும் அழகை இந்த நீர்வீழ்ச்சிப்பகுதி கொண்டிருக்கின்றது.



Click it and Unblock the Notifications