கம்ரு நாக் ஏரியானது பசுமையான புல்வெளிகள் மற்றும் உயர்ந்த தேவதாரு மரங்களால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 3334 மீ உயரத்தில் மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மண்டி-கர்சோக் சாலையில் அமைந்துள்ள இந்த ஏரிப்பகுதியிலிருந்து பாலஹ் பள்ளத்தாக்கு மற்றும் தௌலாதார் மலையின் பனிபடர்ந்த சிகரங்கள் போன்றவற்றை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
கம்ரு நாக் கோயில் இந்த ஏரிக்கு அருகிலேயே மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இந்த ஏரிநீர் முழுவதும் உரைந்துபோய் காட்சியளிக்கிறது. மலையேற்றம் மூலமாக மட்டுமே இந்த ஏரிப்பகுதிக்கு சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குளிர்காலத்தில் மலையேற்றம் மிகக்கடினமாக இருக்கக்கூடும் என்பதால், முதல் முறையாக இந்த ஏரிக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கோடைக்காலத்தில் செல்வது சிறந்தது.



Click it and Unblock the Notifications