பிரஷார் ஏரி, மண்டி

மண்டியிலிருந்து 62 கி.மீ தூரத்தில் உள்ள பிரஷார் எனும் அழகிய கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்த ஏரி பிரஷார் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 2730மீ உயரத்தில் உள்ள இந்த ஏரியின் கரைப்பகுதியில் மூன்று அடுக்குகளைக்கொண்ட கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

பிரஷார் என்று அழைக்கப்பட்ட புகழ் பெற்ற முனிவர் ஒருவரின் பெயரால் இந்த ஏரி அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் கரையில்தான் அவர் தவம் புரிந்துவந்ததாகவும் சொல்லப்படுகிறது. பனிபடர்ந்த மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த ஏரியின் நீர் ஆழ்ந்த நீல நிறத்தில் ஜொலிக்கிறது. ஏரியின் மையத்தில் ஒரு சிறிய தீவையும் பயணிகள் பார்க்கலாம்.

புனிதமான ஸ்தலமாக கருதப்படும் இந்த ஏரிப்பகுதியில் பலவித திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஏரிக்கு கீழே உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பியாஸ் ஆறும் ஓடுகிறது. நாட்டுப்புற கதைகளின்படி இங்குள்ள கோயில் 13ம் நூற்றாண்டில் ஒரு குழந்தையால் ஒரே ஒரு மரத்திலிருந்து கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Please Wait while comments are loading...