மோகோக்சங்கில் இருக்கும் பிற நகரங்களையும் பார்த்தால் தான் இந்த நகரத்திற்கான சுற்றுலாப் பயணம் முழுமையடையும். அந்த வகையில் கண்கவரும் ஆவோ கிராமத்தைக் காண வேண்டுமா? சாங்டோங்யா கிராமத்திற்கு வாருங்கள்.
மோகோக்சங் நகரத்திலிருந்து 40 கிமீ தொலைவில், லாங்பாங்கோங் மலைகளில் இருக்கும் சாங்டோங்யா கிராமத்திற்கு நீங்கள் வந்தால் உங்களுடைய வாழ்வின் துன்பங்களெல்லாம் மறந்து விடும்.
இந்த நகரத்தில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் ட்சுலா (திக்கு) மற்றும் மேலக் நதிகளும் அதன் அழகை மேலும் அதிகப்படுத்துவதாக உள்ளன. மலையின் மீதிருந்து காணும் சுற்று வட்டக்காட்சியின் மூலம் இந்த இரு நதிகளும் வெட்டிச் செல்வதைக் காண முடியும்.
சாங்டோங்யா கிராமத்தின் ஆர்வமூட்டும் விஷயமாக ட்சுலா (திக்கு) நதியில் கிடைக்கும் கச்சா எண்ணையை உள்ளூர் மக்கள் 'மெனெம்ட்சு' என்ற பெயரில் அழைத்து வருவதை சொல்லலாம்.
இங்கு வசித்து வரும் மக்களின் பிரதான மொழியாக ஆவோ மொழி உள்ளது. இந்த வழியாக செல்லும் 61-வது தேசிய நெடுஞ்சாலை, மோகோக்சங் மாவட்டத்துடன் இந்த கிராமத்தை இணைக்கும் சாலையாக உள்ளது.