ஆவோ மக்களை அதிகமாக பெற்றுள்ளதன் காரணமாக மோகோக்சங் கிராமம் நாகலாந்தின் முக்கியமான நகரமாக உள்ளது. ஆவோ மக்களின் இதயம் போன்ற பகுதியான மோகோக்சங்கில், அம்மக்களின் சில ஆர்வமூட்டக் கூடிய குணாதிசயங்களை காண முடியும்.
இவையனைத்தையும் காண்பதற்கு மிகவும் ஏற்ற இடமாக மோகோக்சங் மியூசியம் உள்ளது. பல நூற்றாண்டுகளாக ஆவோ மக்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளைப் பற்றி எடுத்துச் சொல்லும் இடமாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
இந்த மாவட்டத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ள இடமாக மோகோக்சங் மியூசியம் விளங்கி வருகிறது. வாட்கள், கேடையங்கள், புகழ் பெற்ற நாகா சால்வைகள் போன்ற பாரம்பரிய உடைகள், பாரம்பரிய நகைள் மற்றும் பல பொருட்களும் இந்த மியூசியத்தின் தொல்பொருட்களாக வைக்கப்பட்டு வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கின்றன.
மோகோக்சங் மியூசியத்திற்கு நல்ல திட்டமிட்டு பார்வையிட வரும் போது, உங்களுக்கு நாகாலாந்து மற்றும் நாட்டின் பிற பழங்குடியினரிடமிருந்து ஆவோ மக்கள் எந்த வகையில் தனித்தன்மையுடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்திட முடியும்.
இந்த அருங்காட்சியகத்தில் செலவிடப்படும் சில மணி நேரங்களில், ஆவோ மக்களைப் பற்றி உங்களால் நிறைய செய்திகளை அறிந்திட முடியும்.