Search
  • Follow NativePlanet
Share

மோங்போங் - டூவர்சின் நுழைவாயில்!

5

சிலிகுரியிலிருந்து அரை மணி நேரத்தில் டூவர்சின் நுழைவாயிலான மோங்போங்கிற்கு செல்லலாம். இது டீஸ்டா நதிக்கரையில் அமைந்துள்ள சிறிய வங்காள கிராமமாகும். டீஸ்டா படுகை மற்றும் மஹாநந்தா சரணாலயம் ஆகிய இரண்டு இடங்கள் தான் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

மோங்போங்கின் இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும். பெரிய வன சரணாலயம், அடிப்படை பொருட்கள் விற்கப்படும் சிறிய கடைகள் மற்றும் வன இலாக்காவின் சோதனை சாவடி ஆகியவற்றை இங்கே காணலாம்.

டீஸ்டா நதிக்கரையில் அமைந்துள்ள சேவோக் பஜார் எனப்படும் சிறிய சந்தையில் உள்ளூர் பொருட்கள் விற்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இங்கே சில நினைவு பொருட்களை  வாங்கிச் செல்லலாம்.

டீஸ்டா நதியின் மேல் கட்டப்பட்டிருக்கும் காரனேஷன் பாலம் அதிநவீனமாக இருப்பதால் கிராமமாக இருக்கும் இந்த இடத்திருக்கு முரண்பாடாக இருக்கும்.

மோங்போங்கிற்கு சுற்றுலா செல்ல வேண்டுமானால் முன் கூட்டியே திட்டமிடுங்கள். அரசாங்கத்தால் நடத்தப்படும் வன ஓய்வு விடுதி பல நேரம் முன் பதிவு செய்யப்பட்டு விடுவதால் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.

இந்த ஓய்வு விடுதி போல மோங்போங்கில் பல சிறிய தங்கும் விடுதிகளும் உள்ளன. இவைகளின் வாடகையும் குறைவாகவே இருக்கும். சிலிகுரியிலிருந்து இங்கு வந்து செல்ல தொடர்ச்சியான டாக்சி சேவைகள் கிடைக்கின்றன.

வனவிலங்குகள்

பறவைகள் மற்றும் விலங்குகளை விரும்புபவர்களை மோங்போங் ஏமாற்றாது. இங்கே வருபவர்கள் ப்ராமினி மற்றும் ஊசிவால் வாத்துக்கள், பார்-ஹெட்டட் வாத்துக்கள், போச்சர்ட் வாத்துக்கள் மற்றும் மல்லார்ட் வாத்துக்களை கண்டு ரசிக்கலாம்.

லடாக் மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் இருந்து குளிர் காலத்தின் போது சில பறவைகள் இங்கே புலம் பெயரும். அதோடு இங்கே பல குரங்குகளையும் காணலாம்.

மோங்போங்கை அடைவது எப்படி?

மோங்போங்கை சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம். இதற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையமும், விமான நிலையமும் சிலிகுரியில் அமைந்திருக்கின்றன.

மோங்போங் சிறப்பு

மோங்போங் வானிலை

சிறந்த காலநிலை மோங்போங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மோங்போங்

  • சாலை வழியாக
    மோங்போங்கை தேசிய நெடுஞ்சாலை வழியாக அடையலாம். இது சிலிகுரியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும் பிரதான நகரத்தில் இருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சிலிகுரியில் இருக்கும் இரயில் நிலையம் தான் மோங்போங்கிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையமாகும். இங்கிருந்து மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கு இரயில்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மோங்போங்கிற்கு மிக அருகாமையில் இருக்கும் விமான நிலையம் சிலிகுரியில் உள்ளது. இங்கிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu