Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முக்தேஸ்வர் » ஈர்க்கும் இடங்கள் » சவுதி ஜாலி

சவுதி ஜாலி, முக்தேஸ்வர்

19

சவுதி ஜாலி அல்லது சவுலி கி ஜாலி என்று அழைக்கப்படும் ஒரு சுற்றுலாத் தலம் முக்தேஸ்வர் ஆலயத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த தலத்திலிருந்து குமயோன் பள்ளத்தாக்கின் பரவிக் கிடக்கும் அழகிய காட்சிகளையும், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இமயமலைத் தொடரையும் பார்த்து பரவசப்படலாம்.

இந்த பகுதியில்தான் தீய சக்திக்கும், பெண் கடவுளுக்கும் இடையே போர் நடந்ததாக இந்த பகுதியில் வாழ்ந்த முன்னோர் தெரிவிக்கின்றனர். அந்த போரில் பயன்படுத்திய மார்புக் கவசம், யானைத் தந்தம் மற்றும் வாள் போன்றவற்றை இங்கு பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.

இந்த பகுதியில் ஏராளமான நம்பிக்கைகளும் உள்ளன. அதாவது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண் இங்கிருக்கும் மலைத் துவாரத்துக்குள் தனது தலையை நுழைத்து அதை வெற்றிகரமாக வெளியில் எடுத்துவிட்டால், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மேலும் ஒருமுறை கைலாச மன்சரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் குழு ஒரு பெரிய பாறை குறுக்கிட்டதால், அவர்களால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் சிவபெருமானை நினைத்து உருகி வேண்டினர். உடனே சிவபெருமான் குருவை அழைத்து அந்தப் பாறையை நான்கு முறை ஓங்கி அடிக்கச் சொன்னார்.

குருவும் அவ்வாறே செய்தார். உடனே அந்த பாறையில் ஒரு பெரிய துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக பக்தர்கள் தங்கள் யாத்திரையத் தொடர்ந்தனர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed