முக்தேஸ்வரில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் ஆகும். கேட்டில் பிளேக் கமிஷனின் பரிந்துரையின்படி இந்த மையம் 1893ல் அமைக்கப்பட்டது.
அந்தப் பகுதியில் இருந்த கால்நடைகளுக்கு ஏற்பட்ட கொடிய நோய்களைக் குணப்படுத்துவதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டது. இந்த மையம் இந்தியாவில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையகங்களில் முக்கியமான ஒன்றாகும்.
குறிப்பாக கால்நடைகளுக்கான உணவுகள், பாக்டீரியாலஜி மற்றும் ஜெனிட்டிக்ஸ் போன்றவற்றை பற்றிய ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கு ஒரு அழகான கால்நடை அருங்காட்சியகமும், ஒரு தரமான நூலகமும் அமைந்துள்ளன. ஆங்கிலேயக் கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் இந்த மையத்திற்கு சென்று வந்தால் அது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications