அரக்கியாகிய தர்காவுடன் நேருக்கு நேர் மோதிய பின், ராமபிரான் தன் சகோதரராகிய லக்ஷ்மணருடன் கஸ்டஹர்னி படித்துறையில் வந்து ஓய்வெடுத்ததாக வால்மீகியின் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ராமபிரான் சீதாபிராட்டியை மணமுடித்தபின் மிதிலையிலிருந்து அயோத்திக்கு பயணம் மேற்கொண்ட போது கஸ்டஹர்னி படித்துறையைக் கடந்த போது, அவரது சகாக்கள் பலர் இங்கு சிறிது நேரம் தங்கி நீராடிச் சென்றதாகவும் நம்பப்படுகிறது.
பிரபலமான நம்பிக்கைகளின் படி, இப்படித்துறையில் புனிதநீராடுவது அனைத்து வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிப்பதோடு, மனம், உடல் மற்றும் ஆத்மா ஆகியவற்றுக்கு ஆறுதல் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்விடம் மக்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக மட்டுமல்லாது மாலை நேரங்களை இனிமையாகக் கழிக்கக்கூடிய அற்புதமான ஸ்தலமாகவும், வளமான இயற்கை அழகைக் கொண்ட சிறப்பான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இப்படித்துறையின் நீர்ப்போக்கு வடக்கு திசையை நோக்கி இருப்பதினால், இது உத்தர் வாஹினிகங்கா என்றும் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications