பீர்பஹார் மலை, முங்கரிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இம்மலையுச்சியின் மீதிருந்து பார்த்தால் நகரின் அழகிய காட்சியை காணலாம்.
ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளுடன் தொடர்புடைய இம்மலை ஒரு முகமதிய துறவியின் நினைவாக இவ்வாறு வழங்கப்படுகிறது. அன்னாரின் உண்மையான பெயர் தெரியாவிட்டாலும் மக்கள் அவரது சமாதியை வழிபடுவதற்காக இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இம்மலையடிவாரத்தில் காணப்படும் இரண்டு கல்லறைகளுள் ஒன்று, மேரி ஆன்னி பெக்கெட்டான்ட் என்ற பெண்மணியின் ஞாபகார்த்தமாகவும், மற்றொன்று டி’ஓயிலி என்பவரின் ஞாபகார்த்தமாகவும் கட்டப்பட்டுள்ளன.
இந்த கல்லறைகளைப் பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் இல்லாவிட்டாலும், இவை இப்பகுதியின் அமானுஷ்யத்திற்கும், ஈர்ப்புத்தன்மைக்கும் மேலும் வலு சேர்ப்பதாக விளங்குகின்றன.



Click it and Unblock the Notifications