வெந்நீர் ஊற்றாக விளங்கும் சீதா கந்த்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வருடம் முழுவதும் இருந்து வந்தாலும், மகம் பௌர்ணமியன்று செல்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
இங்கு உலவி வரும் நாட்டுப்புறக் கதைகளின் படி, சீதா தேவி தீக்குளித்து வெளியே வந்த போது, அவரது உடலின் வெம்மையை தணிக்க இந்த நீரூற்றில் நீராடியதாகக் கூறப்படுகிறது.
சீதா கந்த்துக்கு எதிர்ப்புறமாக குளிர்நீர் ஊற்றான ராம் கந்த்தும் அமைந்துள்ளது இந்த இடத்தின் பிரபலத்துக்கு மற்றுமொரு காரணமாகும். மேற்குப்புறத்தில், லக்ஷ்மண் கந்த், ஷத்ருகன் கந்த் மற்றும் பரத் கந்த் என்ற பெயர்களில் வழங்கப்படும் மூன்று நீர்த்தேக்கங்களும் காணப்படுகின்றன. இவை மூன்றும் ராமபிரானின் மூன்று சகோதரர்களின் பெயர்களில் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications