கடல் மட்டத்தில் இருந்து 4500 கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. மலையில் இருந்து 40அடி உயரத்தில் விழுகும் இந்நீர்வீழ்ச்சியே முசூரியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகும். யமுனாத்ரி சாலையில் இருந்து 15கிமீ தொலைவில் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்நீர்வீழ்ச்சியைச் சுற்றி இருக்கும் அழகிய இயற்கைச் சூழலில் மயங்கி ஜான் மெக்கினன் என்ற ஆங்கிலேய அதிகாரி இவ்விடத்தை சுற்றுலா தளமாக 1835ல் உருவாக்கினார்.
'கேம்ப் டீ' (camp tea) என்னுமிடத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் தேநீர் நிகழ்ச்சிகளை வைப்பது வழக்கம். அதிலிருந்து இந்நீர்வீழ்ச்சி கேம்ப்டீ என்ற பெயர் பெற்றது. பல பாறைகளைக் கடந்து இந்நீர்வீழ்ச்சி சமநிலைப் பகுதிகளை அடைகிறது. இங்கிருந்து 12கிமீ அக்லார் நதியைக் கடந்து யமுனை நதியை அடையலாம்.
மீன் பிடித்தல், நீச்சல் போன்ற பொழுதுபோக்குகள் இங்கு புகழ்பெற்று விளங்குகின்றன. கெம்ப்டீ நீர்வீழ்ச்சியில் இருந்து முசூரி மற்றும் டெஹ்ராடூனுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications