மூசூரியின் முக்கியமான கடைவீதிகளில் ஒன்றாக லாண்டோர் பஜார் கருதப்படுகிறது. மூசூரியைக் கண்டுபிடித்தவரான கேப்டன் யங் என்பவரின் வசிப்பிடமான முல்லிங்கர் எஸ்டேட் இங்கு அமைந்துள்ளது. பயணிகள் அந்தக்காலத்தைய கட்டிடக்கலையைக் காண இவ்வீட்டிற்கு வருகிறார்கள்.
மேலும் இங்கிருக்கும் உட்ஸ்டாக் பள்ளி, செயிண்ட் பால் தேவாலயத்தின் ராணுவ வீரர்களுக்கான கல்லறை, லாண்டோர் மொழிகள் பள்ளி மற்றும் பல ஆங்கிலேய கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் இங்கு காணலாம்.
சார் டுகான் என்ற பெயரில் பயணிகளுக்கு தேநீர் மற்றும் தின்பண்டங்கள் விற்கும் கடைகளும் இங்கு பிரபலம். மரங்களில் மாட்டப்பட்டிருக்கும் கையினால் வரையப்பட்ட போர்டுகள் லாண்டோர் பஜாரில் நிறைய தென்படுகின்றன.



Click it and Unblock the Notifications