மைசூர் வரும் பயணிகள் நேரம் இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெற்றோரும் விரும்பும் அளவுக்கு இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த சிறிய பூங்காவில் ஒரு வன விலங்கு காப்பகம் உள்ளது.
இங்குள்ள மரப்பாலத்தில் நடந்தபடியே அருகிலுள்ள ஒரு சிறிய ஓடையையும், வாத்துகளையும், கோழிகளையும் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவின் முக்கியமான அம்சம் இங்குள்ள ஹேப்பி மேன் சிலையாகும்.
மனதை மயக்கும் மென்மையான இசை இந்த பூங்காவின் பின்னணியில் ஒலிப்பது ஒரு இனிமையான அனுபவமாகும். நடைப்பயிற்சி செல்ல விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இந்த பூங்கா காலை 4.30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications