நாகர்ஜுனாசாகர் வானிலை

நாகர்ஜுனாசாகர் நகரை அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : நாகர்ஜுனாசாகர் நகரின் கோடை காலங்களில் வெப்பநிலை 40 டிகிரிக்கும் அதிகமாக நிலவும். எனவே சுட்டெரிக்கும் இந்தக் காலங்களில் நாகர்ஜுனாசாகர் நகருக்கு சுற்றுலா வருவது உடல் உபாதைகளை உண்டாக்க வாய்ப்புள்ளதால் பயணிகள் கோடை காலங்களில் நாகர்ஜுனாசாகர் நகருக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : நாகர்ஜுனாசாகர் நகரின் மழைக் காலங்களில் 32 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் நாகர்ஜுனாசாகர் நகரில் மிதமான மழைப் பொழிவு இருப்பதோடு, சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக் கூடும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : நாகர்ஜுனாசாகர் நகரின் பனிக் காலங்களில் இதமான வானிலையே நிலவும். இந்தக் காலங்களின் குளிர் மிகுந்த மாதங்களாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் அறியப்படுகின்றன.