சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான கடவுளாக வணங்கப்படும் ஆஞ்சநேயருக்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நாகூர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் திகழும் இந்த கோயில் அலங்கார தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது.
இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை 32 அடி உயரத்தில் ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு இந்த கோயில் ஸ்தலம் ஒரு அடையாள நிறுத்தமாக பயன்படுகிறது.
கோயில் வளாகத்தின் தூய்மைக்கு யாரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது என்பதில் இந்தக்கோயிலின் நிர்வாக மிக கடுமையான விதிமுறைகளை பின்பற்றுகிறது.
அதே சமயம் பக்தர்களுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளும் இங்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வருடாவருடம் இரண்டு முக்கியமான திருவிழாக்கள் இந்தக்கோயிலில் நடத்தப்பட்டு வருகின்றன.



Click it and Unblock the Notifications