நாகூரில் உள்ள இந்த சிவன் கோயில் தேவாரத்தில் பாடப்பட்டுள்ள ஸ்தலம் எனும் பெருமையுடன் வீற்றிருக்கிறது. இது ஒரு காலத்தில் சேஷபுரி என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
சிவபெருமானை தரிசிக்க வரும் பக்தர் இதர பல தெய்வங்களையும் தரிசிக்கலாம் என்பதும் கூடுதல் விசேஷம். புராணிக ஐதீகங்களின்படி ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கான பரிகார ஸ்தலமாக இந்த கோயில் வணங்கப்படுகிறது.
இரண்டு வருடாந்திர திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அதிகாலை நேரத்தில் இக்கோயிலின் தெய்வத்தை வணங்குவது புனிதமானதாக கருதப்படுகிறது.
இக்கோயிலின் முக்கியமான திருவிழாவான மஹாசிவராத்திரியின்போது வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூலவரை தரிசித்து மகிழலாம். மற்ற எல்லா நாகூர் கோயில்களைப்போன்றே இந்த சிவன் கோயிலும் தென்னிந்திய கோயிற்கலை மரபுப்படி கட்டுவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications