ராஜ வம்ச அடையாளமாக இருக்கும் ராணி தால் நஹன் நகரின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும். நஹன் பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தின் ஓய்விடமாக இருந்த இந்த இடம் 'குயின்ஸ் ஏரி' என்றும் அழைக்கப்படுகிறது.
ராஜ குடும்பத்தின் ஆட்சி தற்போது நடைபெறுவதில்லையாதலால், சமீபத்தில் இந்த இடம் பொதுமக்களுக்கான சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் மக்களுக்கு இயற்கையின் அமைதியான மடியில் துயிலும் அனுபவமும் மற்றும் அற்புதமான ஓய்வும் கிடைக்கும்.
ஏரியின் நடைபாதையையொட்டிய உணவகங்களில் பசியாறிக் கொண்டே இந்த ஏரியை சுற்றிப் பார்த்திட முடியும். வசதியான பேருந்துகளில் நஹனில் இருந்து ராணி தாலுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வகை செய்யப்பட்டுள்ளது.
பசுமையைப் போர்த்தியுள்ள புல்வெளிகளை சுற்றிலும் பெற்றுள்ள இந்த ஏரியில் படகு சவாரியும் செய்ய முடியும். இந்த ஏரியிலிருந்து கண்ணெட்டும் தூரத்தில் உள்ள இந்து கடவுள் சிவபெருமானின் கோவிலுக்கு வருடந்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து மதத்தின் நம்பிக்கையின் படி சிவ பெருமான் அழிக்கும் கடவுளாக கருதப்படுகிறார்.



Click it and Unblock the Notifications