நைனித்தால் பகுதியின் மிக உயரமான சிகரமாக வீற்றிருக்கும் இந்த நைனா பீக் நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. சைனா பீக் என்றும் அழைக்கப்படும் இது கடல் மட்டத்திலிருந்து 2611மீ உயரத்திற்கு எழும்பியுள்ளது.
ஸ்னோ வியூ அல்லது மல்லித்தால் ஆகிய இடங்களிலிருந்து மட்டக்குதிரை மூலம் பயணிகள் இந்த சிகரத்திற்கு சென்றடையலாம்.