நைனித்தால் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த ‘ஜூ’ எனப்படும் விலங்கியல் காட்சிச்சாலையும் ஒன்று. இது கடல் மட்டத்திலிருந்து 2100 மீ உயரத்தில் நைனித்தால் நகர பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் இந்த விலங்கியல் காட்சிச்சாலை அமைந்துள்ளது.
இங்கு ஹிமாலயன் கருங்கரடிகள், குரங்குகள், சைபீரியன் புலிகள், சிறுத்தைகள், ஓநாய்கள், தேவாங்கு, காட்டுக்கிளிகள், வெள்ளைக்காக்கைகள், மலை நரிகள், கோரல், சம்பார் மான்கள் மற்றும் குரைக்கும் மான்கள் ஆகியவற்றை பயணிகள் பார்க்கலாம். திங்கள் கிழமை மற்றும் தேசிய அரசு விடுமுறை நாட்களில் இது மூடப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications