Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நல்கொண்டா » வானிலை

நல்கொண்டா வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட மாதங்களே நல்கொண்டா நகரத்துக்கு பயணம் மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இம்மாதங்களில் மிதமான, இனிமையான சூழல் மற்றும் தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பம் காணப்படுகிறது. சூரியன் சுட்டுப்பொசுக்காமல் மிதமான வெயிலையே தருகிறது. குளுமையான காற்று வீசுவதால் வெளியில் சுற்றிப்பார்க்கவும் இந்த மாதங்கள் ஏதுவாக உள்ளன. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் செல்லும் பயணிகள் மெல்லிய குளிர் ஆடைகளை எடுத்துச்செல்வதும் உகந்தது.

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கி ஜூன் மாதம் வரை நல்கொண்டா பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் இங்கு உஷ்ணம் மிக அதிகமாக இருக்கும். ஜுன் மாத இறுதியிலெயே மழைக்காலம் துவங்கிவிடுகிறது. மிகக்கடுமையான தாங்கிக்கொள்ளமுடியாத வெப்பம் மற்றும் ஈரப்பதத்துடன் மிக அதிகபட்ச வெப்பநிலையாக 45° C வரையில் இக்காலத்தில் காணப்படுகிறது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் நல்கொண்டா பகுதியில் வெப்பநிலை சராசரியாக 35° C என்ற அளவில் குறைந்துவிடுகிறது. இருப்பினும் ஈரப்பதம் அதிகமாகவே காணப்படுகிறது. ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் முடியும் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கின்றது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கூட சிறிதளவு மழை இருக்கக்கூடும். பொதுவாக மழைக்காலத்தில் மிதமான மழையையே இப்பகுதி பெறுகிறது.

குளிர்காலம்

நல்கொண்டாவில் நவம்பர் மாத இறுதியில் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாதத்தின் இறுதி வரை நிலவுகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் குளுமையாக காணப்படுகின்றன. குளிர்காலத்தில் சராசரியாக வெப்பநிலை 22° C என்ற அளவில் காணப்படுகிறது. அதிகக்குளிர் அல்லாத மிதமான் சூழல் நிலவுவது குளிர்காலத்தின் சிறப்பம்சமாகும். மாலைநேரம் மற்றும் இரவுகளில் கொஞ்சம் குளிர் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கொஞ்ச மெல்லிய குளிர் ஆடைகள் தேவைப்படலாம்.