முகப்பு » சேரும் இடங்கள் » நல்கொண்டா » ஈர்க்கும் இடங்கள்
 • 01லதீஃப் ஷேஃப் தர்க்கா

  லதீஃப் ஷேஃப் தர்க்கா

  நல்கொண்டா பகுதியில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த லதீஃப் ஷேஃப் தர்க்கா ஆகும். ஒரு முஸ்லிம் யோகிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தர்க்காவிற்கு எல்லா மதப்பிரிவுகளை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர்.

  இரண்டு மலைகளைக்கொண்ட ஒரு மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தர்க்கா ஸ்தலம் மலையேற்ற ஆர்வலர்கள் மற்றும் நடைப்பயணிகள் போன்றோரையும் ஈர்க்கிறது. எ

  னவே பக்தர்கள் மட்டுமல்லாது சுற்றுலாப்பயணிகளையும் ஏராளமாக இந்த தர்க்காவில் பார்க்க முடிகிறது. இந்த தர்க்காவில் வேண்டிக்கொண்டால் நினைப்பது நிறைவேறும் என்பதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது. எனவே வெகு தூரத்திலிருந்தும் யாத்ரீகர்கள் இந்த தர்க்காவுக்கு பயணம் மேற்கொண்டு வருகை தருகின்றனர்.

  வருடாந்திர உருஸ் திருவிழா இந்த தர்க்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் தர்க்காவுக்கு விஜயம் செய்து களப்பணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த தர்க்காவுக்கு வெகு அருகிலேயே கபுராலா குட்டா எனும் மலையும் காணப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 02பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள்

  பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள்

  நல்கொண்டா நகரத்திலிருந்து 84 கி.மீ தூரத்தில் இந்த பாணிகிரி பௌத்த ஸ்தலம் அமைந்துள்ளது. சமீபத்தில் ஆந்திர மாநில அரசின் தொல்லியல் துறையால் இந்த புராதன ஸ்தலம் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  பாணிகிரி ஸ்தலத்தில் ஒரு பெரிய வளாகம் போன்ற கட்டுமானம் காணப்படுகிறது. இதில் ஒரு பெரிய ஸ்தூபி மற்றும் ஸ்தூபங்களை உள்ளடக்கிய இரண்டு பெரிய கூடங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

  இந்த வளாகத்தின் அளவைப் பார்க்கும்போது இது அக்காலத்தில் மிகப்பெரிய பௌத்த ஸ்தலமாக திகழ்ந்திருக்க வேண்டுமென்பது புலனாகிறது. இந்த வளாகத்தில் ஓரிடத்தில் பெரிய பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. இவை புத்தரின் பாதச்சுவடுகளாக நம்பப்படுகின்றன.

  இதே வளாகத்தில் புத்த பிக்குகள் வசித்திருக்கக்கூடிய விகாரை அல்லது விகாரங்கள் என்று அழைக்கப்படும் வசிப்பறைகளும் காணப்படுகின்றன. இந்த பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள் ‘நாகப்பட மலை’ எனும் மலையின் உச்சியில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மலை பார்ப்பதற்கு படமெடுக்கும் பாம்பின் தலையை போன்று காட்சியளிப்பதால் இப்பெயரை பெற்றுள்ளது.

  + மேலும் படிக்க
 • 03பனகல் கோயில்

  பனகல் கோயில்

  பனகல் கோயில் என்றழைக்கப்படும் இந்த பனகல் சோமேஸ்வரா கோயில் பனகல் எனும் கிராமத்தில் வீற்றிருக்கிறது. இந்த கிராமம் நல்கொண்டா நகருக்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து 101 கி.மீ தூரத்தில் இந்த பனகல் கிராமம் உள்ளது.

  வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்த கிராமம் புராதன காலத்தில் காகதீய ராஜ வம்சத்தினரின் தலைநகரமாக செழிப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதாக சொல்லப்படுகிறது.

  11ம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஸ்தலத்தை காகதீய வம்சத்தினர் தலைநகராக ஆக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடையாளமாக ஒரு கோயிலையும் அவர்கள் இந்த ஊரில் நிர்மாணித்துள்ளனர்.

  இந்த கோயில் 66 தூண்களைக் கொண்டதாக கம்பீரத்துடன் எழும்பி நிற்கிறது. இந்த தூண்கள் ஒவ்வொன்றும் நுணுக்கமான செதுக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. கோயில் மண்டப வாசலில் ஒரு நந்தி சிலையும் வீற்றுள்ளது.

  சிவபெருமான் மூலவராக கருவறையில் காட்சியளிக்கின்றார். மேலும் கோயில் சுவர்களில் ராமாயண மற்றும் மஹாபாரத காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

  + மேலும் படிக்க
 • 04புவனகிரி கோட்டை

  புவனகிரி கோட்டை

  திரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார்

  40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.

  நீள்வட்ட வடிவத்தில் காணப்படும் இந்த கோட்டையின் உள்ளே அதன் இரண்டு வாசல்கள் வழியாக நுழையலாம். கோட்டையைச்சுற்றி ஆழமான அகழியும் அமைக்கப்பட்டுள்ளது.

  கோட்டையின் உள்ளே பாதாள அறைகள், நீண்ட கூடங்கள், ரகசியச்சுரங்கப்பாதைகள், ரகசிய ஆயுத அறைகள் மற்றும் குதிரை லாயங்கள் போன்றவை காணப்படுகின்றன.

  கோட்டையின் மேல் அடுக்கில் இரண்டு குளங்கள் மற்றும் ஆழமான கிணறுகள் போன்றவையும் நீர் தேவைகளுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோட்டையின் உச்சிக்கு இருண்ட படிப்பாதை மூலமாகவோ அல்லது வளைந்து வளைந்து செல்லும் செங்குத்தான பாதை மூலமாக சென்றடையலாம். சாகச சுற்றுலாப்பிரியர்களுக்கு இந்த கோட்டை ஸ்தலம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

  + மேலும் படிக்க
 • 05ராஜீவ் பார்க்

  ராஜீவ் பார்க்

  மறைந்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் அழைக்கப்படும் இந்த பூங்கா நல்கொண்டா நகரத்திலுள்ள புகழ் பெற்ற பூங்காவாகும். முக்கிய சுற்றுலா அம்சமாக கருதப்படும் இது உள்ளூர் மக்களாலும் அதிக அளவில் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது. நகரத்தின் மையப்பகுதியில் வீற்றுள்ள இது நன்றாக பராமரிக்கப்படுகிறது.

  கவனமாக கத்தரித்து அலங்கரிக்கப்பட்ட புல்தரைகளும் மலர்ச்செடிகளும் இந்த பூங்காவை அலங்கரிக்கின்றன. பூக்கும் பருவத்தில் விதவிதமான மலர்கள் பல வண்ணங்களில் பூத்து பூங்காவை ஜொலிக்க வைக்கிறது.

  இவற்றில் பல மலர்ச்செடிகள் அரிய வகைகளை சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமல்லாமல் பல மரங்களும் இந்த பூங்காவில் அணிவகுத்து நிற்கின்றன.

  பூங்கா வளாகத்திலேயே வண்ண விளக்குகளுடன் கூடிய ஒரு இசை நீரூற்று ஒவ்வொரு மாலையும் இயக்குவிக்க படுகிறது. குழந்தைகளுக்காக கேளிக்கை நிகழ்ச்சிகளும் இந்த பூங்காவில் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுகின்றன.

  இந்த பூங்காவிற்கு விஜயம் செய்ய எவ்வித நுழைவுக்கட்டணமும் இல்லை. இருப்பினும் பூங்காவின் உள்ளே அசுத்தப்படுத்தும் செயல்பாடுகள் கூடவே கூடாது என்று அறிவிப்புப்பலகை வாசலிலேயே பயணிகளை எச்சரிக்கிறது.

  + மேலும் படிக்க
 • 06மெல்லசெருவு

  மெல்லசெருவு

  மெல்லசெருவு எனும் இந்த கிராமம் நல்கொண்டா மாவட்டத்தில் நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமம் ஒரு ஓடையின் மூலம் விஜயவாடா நகரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும்.

  வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இக்கிராமத்தில் காகதீய அரசர்கள் கட்டிய பல கட்டிடக்கலை சின்னங்கள் காணப்படுகின்றன. பல கோயில்கள் இந்த மெல்லசெருவு கிராமத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன.

  இவற்றில் சுயம்பு ஜம்புலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் குறிப்பிடத்தக்கதாகும். ஒரு தனித்தன்மையான அதிசயமாக இக்கோயிலின் சிவலிங்கம் கோயிலின் உச்சியில் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  லிங்கத்தில் உள்ள 2 அங்குல துவாரத்தில் எப்போதுமே நீர் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பு காரணமாக இந்த மெல்லசெருவு கிராமம் ‘தென்னாட்டு வாரணாசி’ என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது. இந்த கோயிலின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வருவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.

  + மேலும் படிக்க
 • 07நந்திகொண்டா

  நந்திகொண்டா

  கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த நந்திகொண்டா ஆகும். நாகர்ஜுனசாகருக்கு வெகு அருகில் இந்த கிராமம் அமைந்துள்ளது.விஜயபுரி எனும் சிறுநகரத்திலிருந்து இந்த நந்திகொண்டா கிராமத்திற்கு எளிதாக சென்றடையலாம். புராதன காலத்தில் இஷவாஹு எனும் ராஜவம்சத்தினர் ஆண்ட ராஜ்ஜியமே இந்த விஜயபுரி ஆகும்.

  நல்கொண்டாவுக்கு அருகிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாக இந்த நந்திகொண்டா பிரசித்தி பெறக்காரணம் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பௌத்த ஸ்தலங்களாகும். புத்தவிகாரைகள், கூடங்கள் மற்றும் தூண்களைக்கொண்ட இந்த பௌத்த ஸ்தலங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் விஜயம் செய்யவேண்டிய ஒரு ஸ்தலம் இந்த நந்திகொண்டா ஆகும். பௌத்த அகழ்வாராய்ச்சி ஸ்தலங்கள் தவிர இப்பகுதியில் ஒரு புராதன கோட்டையையும் பயணிகள் காணலாம். இஷவாஹு வம்சத்தினர் கட்டியுள்ள இந்த கோட்டை தற்போது சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.

  இப்பகுதியில் ஒரு காலத்தில் கோலோச்சிய இஷவாஹு ராஜபரம்பரையின் மஹோன்னதத்துக்கு சான்றாக இந்த கோட்டை வீற்றிருக்கிறது. இந்த கோட்டையில் இருந்த சில புராதனப்பொருட்கள் தற்போது மத்திய தொல்லியல் துறையின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

  + மேலும் படிக்க
 • 08கொல்லன்பாகு ஜெயின் கோயில்

  கொல்லன்பாகு ஜெயின் கோயில்

  நல்கொண்டா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இந்த கொல்லன்பாகு ஜெயின் கோயில் ஹைதராபாத் நகரிலிருந்து 79 கி.மீ தூரத்தில் உள்ளது. ஜைனக்கோயிலான இது ஜைனம் அதிகம் பின்பற்றப்படாத ஆந்திர பூமியில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது.

  இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாக கருதப்படும் இந்த ஜைனக்கோயில் சரியாக பராமரிக்கப்படாததால் இடிபாடுகளுடன் காட்சியளிக்கிறது. இருப்பினும் ஆந்திர அரசாங்கம் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் முயற்சிகளுக்கு பிறகு இது சற்று கவனிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் மத்தியிலும் பிரசித்தி பெறத்துவங்கியுள்ளது.

  இருப்பினும் இந்த புராதனக்கோயிலை அதன் ஆதிகால தோற்றத்துக்கு கொண்டுவர இன்னும் ஏராளம் முயற்சிக்க வேண்டியுள்ளது. வைணவம் தழைத்தோங்கிய மண்ணில் சமணக்கோயில் உருவாகியிருக்கும் அதிசயம் ஒரு வரலாற்று அற்புதமாகவே கருதப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 09ரச்சகொண்டா கோட்டை

  ரச்சகொண்டா கோட்டை

  ரச்சகொண்டா கோட்டைப்பகுதி 14 மற்றும் 15ம் நூற்றாண்டுகளில் இப்பகுதியை ஆண்ட வேலமா அரசர்கள் தலைநகரமாக விளங்கியதாகும். தென்னிந்தியாவிலேயே அதிகம் மதிக்கப்படாத ஒரு ராஜவம்சம் என்றால் அது இந்த வேலமா வம்சமாகத்தான் இருக்க முடியும்.

  இவர்கள் பாமனி முஸ்லிம் அரசர்களோடு கூட்டு சேர்ந்து ‘கொண்டவீட்டு ரெட்டி அரசர்’களுடன் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டிருந்ததே அதற்கு காரணம். வாரங்கல் கப்பய்ய நாயக்கர்களுடனும் இந்த வேலமா அரசர்கள் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.

  இப்படிப்பட்ட சூழலில் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் வேலமா அரசர்கள் இந்த ரச்சகொண்டா கோட்டையை கட்டினர். இருப்பினும் முஸ்லிம் அரசர்களின் சதி காரணமாக இவர்கள் செல்வாக்கிழந்து கப்பம் வசூலிக்கும் பாளையக்காரர்கள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

  அதுமட்டுமல்லாமல், இனி ராஜ்ஜியம் ஆளமுடியாது என்ற சாபத்தையும் ஒரு பிராமணரிடமிருந்து அவர்கள் பெற்றுவிட்டனர். இன்றும் அந்த சாபத்தின் காரணமாகத்தான் ரச்சகொண்டா கோட்டை சிதிலமடைந்து கிடப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆர்வம் உள்ள பயணிகளும் உள்ளூர் மக்களும் இந்த கோட்டைப்பகுதிக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன் விஜயம் செய்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 10தேவரகொண்டா கோட்டை

  தேவரகொண்டா கோட்டை

  தேவரகொண்டா கோட்டை நல்கொண்டா மாவட்டத்தில் தேவரகொண்டா எனும் சிறு நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு மலை சூழ்ந்திருக்கும் ஒரு மலையின்மீது இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

  14 ம் நூற்றாண்டில் ரேச்சரல வேலமா அரசர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. தங்கள் ராஜ்ஜியத்துக்கு வலிமையான கேந்திரமாக இந்த கோட்டையை அவர்கள் நிர்மாணித்துள்ளனர்.

  பல நூற்றாண்டுக்காலம் பராமரிப்பின்றி இன்று இந்த கோட்டை சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. இந்த கோட்டை ஸ்தலத்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக தொல்லியல் நிபுணர்கள் இங்கு அதிகம் விஜயம் செய்கின்றனர்.

  இந்த புராதன கோட்டையை காப்பாற்ற மாநில அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் இப்பகுதி சமூக விரோதிகளின் செயல்பாடுகளால் மேலும் சேதமடைந்துவருகிறது.இந்த கோட்டைக்கு நல்கொண்டா, ஹைதராபாத், ஷீசைலம் மற்றும் நாகார்ஜுன சாகர் ஆகிய நகரங்களிலிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கலாம்.

  + மேலும் படிக்க
 • 11பில்லலமரி

  நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பில்லலமரி ஆகும். இங்கு காகதீய வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு இந்த கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த அழகிய கோயில்கள் வீற்றுள்ளன.

  காகதீய வம்சத்தினரின் தனித்தன்மையான கோயிற்கட்டுமான பாணிக்கான எடுத்துக்காட்டாகவும் இந்த கிராமத்திலுள்ள கோயில்கள் விளங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக நீண்ட காலம் கவனிக்கப்படாமல் இருந்ததினால் இந்த கோயில்களில் சில சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன.

  இருப்பினும் இவற்றில் ஒன்று மட்டும் நல்ல நிலையில் காணப்படுகிறது. இது சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள சென்னக்கேசவ ஸ்வாமி கோயிலாகும். காகதீய வம்சத்தினரின் உன்னத கட்டடக்கலை அம்சங்களை இந்த கோயிலில் பார்க்கலாம்.

  தரையிலிருந்து 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பீடம் போன்ற அமைப்பின் மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் வாசலில் ஒரு கம்பீரமான நந்தி சிலை பக்தர்களை வரவேற்கிறது.

  + மேலும் படிக்க
 • 12மட்டபள்ளி

  மட்டபள்ளி

  நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே உள்ள இந்த மட்டபள்ளி கிராமம் கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு நரசிம்மஸ்வாமி கோயிலுக்காக இந்த கிராமம் சுற்றுலாப்பயணிகளிடையே பிரசித்தி பெற்றுள்ளது.

  இந்த கிராமத்தின் அமைதிக்காகவே இது அவசியம் விஜயம் செய்யப்படவேண்டிய ஸ்தலங்களின் பட்டியலில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். அடர்ந்த காட்டுப்பகுதியில் நடுவே வீற்றிருக்கும் இந்த கிராமத்தை ஒட்டியே புனிதமான கிருஷ்ணா ஆறு ஓடுவது கூடுதல் விசேஷமாகும். எனவே ஆற்றங்கரை கிராமத்துக்கே உரிய அமைதி இயற்கை எழில் போன்றவற்றை இது வாய்க்கப்பெற்றுள்ளது.

  ஹிந்து புராணக்கதைகளின்படி மட்டபள்ளி பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வேடாத்ரி, வேதபுரம், மங்கள்கிரி மற்றும் வடபள்ளி ஆகியவை ஏனைய நான்கு ஷேத்திரங்களாகும்.

  இந்த நான்கும் நான்கு எதிரெதிர் திசைகளில் வீற்றிருக்க மையப்பகுதியில் இந்த மட்டபள்ளி ஷேத்திரம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டப்பள்ளியில் வீற்றிருக்கும் கடவுளுக்கு இணையான கடவுள் வேறு இல்லை என்பதாக உள்ளூர் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed