நாமக்கல் மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள நரசிம்மர் கோவில் இந்த பகுதியிலேயே மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாக உள்ளது. அதியமானின் வம்சத்தைச் சேர்ந்த குணசீலரால் கட்டப்பட்ட இந்த கோவிலில் நரசிம்மரின் உருவம் பாறைகளில் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது.
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவரான நரசிம்மரைப் பார்க்க எண்ணற்ற பக்தர்கள் தினம் தினம் வந்து செல்லும் இடமாக இந்த நரசிம்மர் சுவாமி கோவில் உள்ளது.
புகழ் பெற்ற வைணவ தலமாகவும், வைணவர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியாகவும் இருக்கும் நாமக்கல் நகரில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் சிவன் கோவில்கள் பார்வைக்குத் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
இந்த நரசிம்மர் கோவில் மலையின் அடிவாரத்தில், ஆஞ்சநேயருக்கு நேர் எதிரில் காட்சியளிக்கும் படி அமைந்துள்ள இந்த கோவிலைச் சுற்றி கமலாலயம் குளம் மற்றும் ஒரு அம்மன் கோவில் ஆகியவை உள்ளன. இங்கு கொண்டாடப்படும் நரசிம்ம சுவாமி தேர்த்திருவிழா இந்த கோவிலுக்கு பெருமை சேர்க்கும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.



Click it and Unblock the Notifications