புனிதப் பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது.
இங்கே எதிரில் இருக்கும் நரசிம்மர் கோவிலிலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே நரசிம்மரைப் பார்த்தபடி ஆஞ்சநேயர் துதித்திருக்கிறார். இந்த கோவிலின் கவர்ச்சி அம்சமாக 13 அடி உயரத்தில் நின்று கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலையை சொல்லலாம்.
ஆஞ்சநேயர், நரசிம்மரை நேரடியாக பார்க்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சிலைதான், கோட்டையையும், அங்கு வசித்து வரும் மக்களையும் காப்பாற்றும் தெய்வமாக நம்பப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications