கடல் மட்டத்திலிருந்து 8530 அடி உயரத்தில் உள்ளது இக்குன்று. இது ஒரு இறந்த எரிமலை ஆகும். வெள்ளத்தினால் இங்குள்ள நிலங்கள் மூழ்கிய பொழுது மக்களைக் காப்பாற்ற கொம்புகளால் இந்த நிலம் உயர்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
எனவே உயர்த்தப்பட்ட கொம்புகளின் மலை என்று பொருள்படும் டென்டாங்க் என்று இவ்விடம் அழைக்கப்படலாயிற்று. லாமாக்கள் ஆண்டுக்கணக்கில் தியானம் செய்ய இந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மலையேற்றத்திற்கு இக்குன்று மிகவும் புகழ்பெற்றது. மலர்களும் தாவரங்களும் அடர்ந்த காட்டின் வழியே 6 கிலோமீட்டர் நீளத்திற்கு நீளும் மலையேற்றப்பாதை மிகவும் அழகானது.