Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நம்ச்சி » ஈர்க்கும் இடங்கள் » சம்த்ருப்சே குன்று

சம்த்ருப்சே குன்று, நம்ச்சி

21

சிக்கிமிலுள்ள சுற்றுலாத்தலங்களுள்  சம்த்ருப்சே குன்று மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. பூட்டியா மொழியில், சம்த்ருப்சே என்றால், விரும்பியதை நிறைவேற்றும் குன்று என்று பொருள்.எனவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு புனித யாத்திரை வருகிறார்கள்.

தென் சிக்கிம் மாநிலத்தில், நம்ச்சிக்கு அருகில், சம்த்ருப்சே குன்று அமைந்துள்ளது. சிக்கிமை ஆசீர்வதித்தவர் என்று கருதப்படும் குரு ரின்போச்சே என்று அழைக்கப்படும் குரு பத்மசம்பவாவின் மிகப்பெரிய சிலை அமைந்திருப்பதால், இவ்விடம் மிகவும் புகழ்பெறலாயிற்று.

உலகத்திலேயே மிகப்பெரிய சிலையாக கருதப்படும் இச்சிலை 135 அடி உயரம் கொண்டதாகும். இச்சிலைக்கு 1997 ஆம் ஆண்டு தலாய்லாமா அடிக்கல் நாட்டினார். அதன்பின் மூன்று ஆண்டுகளில் சிக்கிம் அரசின் நிதி உதவியுடன் இது கட்டி முடிக்கப்பட்டது.

ஏராளமான புத்த மதத் துறவிகள் இந்த இறந்த எரிமலையை அமைதியாகவே இருக்கச் செய்ய மலை உச்சிக்கு சென்று பூஜித்து வருகிறார்கள்.

சம்த்ருப்சே குன்று காங்டாக்கிலிருந்து 75 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சம்த்ருப்சே குன்றுக்கும் நம்ச்சிக்கும் இடையில் ஒரு ரோப்கார் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சம்த்ருப்சே குன்றினைச் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

குரு பத்மசம்பவாவின் சிலையைத் தவிர, பாறைத்தோட்டம் ஒன்று இங்குள்ளது. இங்கிருந்து கஞ்சன்ஜங்கா சிகரத்தின் அழகைக் கண்டு ரசிக்கலாம். இச்சிகரத்தினை ரோப்கார், நூலகம், தியானக் குடில்கள், வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றுடன் கூடிய பன்னாட்டு புனிதத்தலமாக மாற்றுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat