Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நம்ச்சி » ஈர்க்கும் இடங்கள் » சோலோஃபாக் சர்தாம்

சோலோஃபாக் சர்தாம், நம்ச்சி

21

சிக்கிமில் உள்ள பிரசித்திபெற்ற ஆன்மீக சுற்றுலாத்தலங்களுள்  சோலோஃபாக் சார்தாமும் ஒன்று. சிவபெருமான் இக்கோவிலில் முதன்மைக் கடவுளாய் இருந்து அருள்பாலிக்கிறார்.

நம்ச்சி நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலோஃபாக் குன்றின் மீது இந்த சார்தாம் உள்ளது. இவ்விடத்தைப் பற்றிய சுவையான வரலாற்றுக் கதை ஒன்று உண்டு.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற குருக்ஷேத்திர யுத்தத்தின்போது, அர்ஜுனன் இந்த இடத்திலிருந்துதான் சிவபெருமானை நோக்கி தவம் செய்தானாம்.

அர்ஜுனனின் தவத்தினால் அகமகிழ்ந்த சிவபெருமான், ஒரு வேடன் உருவத்தில் காட்சியளித்து, போரில் பாண்டவர்கள் வெல்லும் வண்ணம் அருள்புரிந்தாராம். இந்தக் கதையை அடிப்படையாக வைத்துதான் இவ்விடத்தில் சார்தாம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் நம்பிக்கையின்படி இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய ஆன்மீகத் தலங்கள் சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன. அவை, பத்ரிநாத், பூரி ஜகன்னாத், துவாரகா, ராமேஸ்வரம் ஆகியவை ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டே இந்த சார்தாம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சார்தாம் ஆனது 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 16 அடி உயரமுள்ள சிவபெருமானின் பிரம்மாண்டமான சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சிவபெருமானின் இச்சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சார்தாமில், ராமேஸ்வரம் கோவிலைத்தவிர, மஹாவிஷ்ணுவின் பிற கோவில்களான, பத்ரிநாத், ஜகன்னாத் மற்றும் துவாரகா ஆகியவற்றின் அமைப்புகள் எழுப்பப்பட்டுள்ளன.

இக்கோவில் வளாகம் பின்வருமாறு 4 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது,

1. 12 ஜோதிர்லிங்கங்களுடன் கூடிய சிவபெருமானின் சிலை2. சார்தாம் (நான்கு புனித ஆலயங்கள்)3. சாய்பாபா ஆலயம்4. கிரதேஸ்வரர் சிலை, நந்தி சிலை

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed