நந்திக் குன்றுக்கு வரும் பயணிகள் கட்டாயம் நந்திக் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்தக் கோயில் விஜயநகர பேரரசின் காலத்தில் கெம்பி கௌடா அரசராக இருந்தபோது கட்டப்பட்டது. அப்பகுதியின் பெருமதிப்பு மிக்க புண்ணிய ஸ்தலமாக நந்தி கோயில் கருதப்படுகிறது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோக நந்தீஸ்வராவும், போக நந்தீஸ்வராவும் இக்கோயிலின் முதன்மை தெய்வங்களாகும்.
நந்திக் கோயில் அற்புதமான உலோக வேலைப்பாடுகளாலும், அழகிய சிற்பங்களை தாங்கி நிற்கும் தூண்களாலும் எழிலே உருவமாய் காட்சியளித்து கொண்டிருக்கிறது. இந்தக் கோயிலின் முன்பு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படும் விளக்குத் தூண் ஒவ்வொரு நாளும் ஜோதிமயமாகவே பக்தர்களுக்கு தோற்றமளிக்கும்.



Click it and Unblock the Notifications