இயற்கை எழில் வாய்ந்த கிராமமான பர்னன்வாஸ், ஹரியானா-ராஜஸ்தான் எல்லையில், நார்னொலில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருக்கும் பாபா ராமெஷ்வர் தாஸ் கோயில் புகழ்பெற்று விளங்கிறது.
இக்கோவில் பர்னன்வாஸ் கிராம எல்லைக்குள் கட்டப்பட்டிருந்தாலும், அதன் பிரதான சுவர் ராஜஸ்தானின் டிப்பா பசாய் கிராமத்தில் விழுகிறது. பாபா ராமேஷ்வர் என்பரால் 1963ல் கட்டப்பட்ட இக்கோவிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
பல சீரமைப்புகள் நிகழ்ந்த இக்கோவிலின் முக்கிய ஈர்ப்பாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்களுடனும், ஏராளமான பக்தர்கள் அமரும் வண்ணமும் அமைந்துள்ள அதன் பரந்த அரங்கம் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications