நாசிக் நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் பிரதானமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது. இது ஆசியாவிலேயே ஒன்றே ஒன்று எனும் பெருமையை பெற்றிருக்கிறது. நாணய மற்றும் பண ஆராய்ச்சி மையம் 1980ல் இங்கு அமைக்கப்பட்ட போது இந்த அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டது.
அழகிய மலைகளின் மீது அமைந்துள்ள அஞ்சநேரி எனும் இடத்தில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. இந்திய நாகரிகத்தில் பணம் மற்றும் நாணயங்கள் குறித்த எல்லா வரலாற்று தகவல்களும் ஆய்வுப் பதிவுகளும் இந்த மையத்தில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
அபூர்வ சேகரிப்புகள், புகைப்படங்கள், நிஜ மற்றும் நகலெடுக்கப்பட்ட நாணய மாதிரிகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய நாணய முறையை பற்றிய ஒரு தெளிவான பார்வையை இவை முன் வைக்கின்றன. நாணய சேகரிப்பு பற்றிய சிறப்பு வகுப்புகளும் இங்கு ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்காக நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications