மஹாரஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளுல் இது முக்கியமான ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. நாசிக் அருகில் சோமேஸ்வரில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி 10 மீட்டர் உயரத்திலிருந்து அழகுற கொட்டுகிறது. இதன் அருகில் எழிலுடன் கூடிய இயற்கைக் காட்சி அம்சங்கள் காணப்படுகின்றன.
சிற்றுலா செல்வதற்கான சிறந்த இடமாக கருதப்படும் இது மழைக்காலத்தின் போது பெரிதும் ரசிக்கப் படுகிறது. நீர்வீழ்ச்சியின் மேற்பகுதிக்கு ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications