நாசிக்கின் பிரதான சுற்றுலா அம்சங்களில் ராம குண்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்தக் குளம் 1696 ஆம் ஆன்டு சித்தாராவ் கடர்கர் என்பவரால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த புனிதக் குளம் 27 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
புராண ஐதீகங்களின்படி ராமபிரானும் சீதாதேவியும் இங்கிருந்த குளத்தில் குளித்ததாக நம்பப் படுகிறது. இந்த குளத்தில் குளித்தால் மோட்சம் அல்லது முக்தி கிட்டும் என்று ஹிந்து பக்தர்கள் நம்புகின்றனர்.
ஜவஹர்லால் நேரு இந்திரா காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இதில் நீராடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாசிக் பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த குளத்தில் நீராட பக்தர்கள் ஏராளம் வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications