இந்தியாவில் பிரபலமான ஆன்மீக யாத்ரிக ஸ்தலங்களில் இந்த திரிம்பகேஷ்வர் ஸ்தலம் ஒன்றாகும். நாசிக் அருகில் அமைந்துள்ள இது ஔந்தா நாகநாத் போன்றே மற்றுமொரு ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கும் திருத்தலமாகும்.
இந்த ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்திருக்கும் ஸ்தலங்கள் அருகருகே அமைந்திருப்பதால் ஒரே பயணத்திலேயே ஒரே நாளில் யாத்ரீகர்கள் யாவற்றையும் பார்த்துவிடுவது நல்லது. திரிம்பகேஷ்வர் கோயிலுக்கு விஜயம் செய்யும் யாத்ரீகர்களுக்கு மோட்சம் கிட்டும் என்பதாக ஐதீகம் நிலவுகிறது.
பக்தர்கள் இங்குள்ள தங்குமிடங்களில் கோயில் நிர்வாக அனுமதியுடன் தங்கி ஓய்வெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications