நாதத்துவாரா நகரின் ஷாப்பிங் பகுதிகளில் நீங்கள் டெர்ராகோட்டா, பகட்டான கைவினைப் பொருட்கள் போன்றவற்றை வாங்கிச் செல்லலாம். அதோடு புகழ்பெற்ற பிச்வாய் ஓவியங்களை வாங்கி உங்கள் பிரியமானவர்களுக்கு பரிசளிக்கலாம்.
இந்த கலைப்பொருட்கள் அனைத்தும் 2000 ஆண்டுகள் பழமையானதுடன், பெரும்பாலும் கடவுள் உருவங்களையே அவற்றில் காண முடியும். அதிலும் குறிப்பாக மீனா கலை வேலைப்பாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
நாதத்துவாராவின் ஷாப்பிங் பகுதிகளில் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட அருங்கலைப் பொருட்களை மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த ஷாப்பிங் பகுதிகளுக்கு நீங்கள் வரும் போது நாக்கில் எச்சு ஊறவிக்கும் சுவைமிக்க உணவு வகைகளை ருசிக்க மறக்காதீர்கள்.



Click it and Unblock the Notifications