கக்கோலட் நீர்வீழ்ச்சி இந்தியாவின் அழகிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்று எனும் பெருமையை பெற்றிருக்கிறது. ரம்மியமான இயற்கை எழிற்காட்சிகளால் சூழப்பட்டிருப்பதால் இது பயணிகளிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது.
கக்கோலட் மலையிலிருந்து 160 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. ஒரு புராணிக கதை ஒன்றும் இந்த நீர்வீழ்ச்சியோடு தொடர்புபடுத்தி கூறப்பட்டு வருகிறது. அதாவது, முனிவர் ஒருவரின் சாபத்துக்கு ஆளான மன்னன் ஒருவன் மலைப்பாம்பாக மாறி இந்த நீர்வீழ்ச்சியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கோடைக்காலத்திலும் கூட இந்த நீர்வீழ்ச்சியின் நீர் குளுமையுடன் காணப்படுவது ஒரு ஆச்சரியமான அம்சமாக உள்ளது. எனவே சுற்றுலாப்பயணிகள் கோடையிலும் இங்கு விஜயம் செய்து மகிழ தடையில்லை.
வனவாச காலத்தில் பாண்டவர்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு விஜயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் ஒரு தடாகம் போன்ற அமைப்பும் உள்ளது. இப்பகுதியில் பயணிகள் பிக்னிக் பொழுதுபோக்கில் ஈடுபடலாம். பைசாகி சங்கராந்தி திருநாளின்போது இந்த இடத்தில் ஒரு சந்தைத்திருவிழா நடத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications