Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் 7 அதிசயங்களையும் 7 நாட்களுக்குள் சுற்றிப் பார்த்த பயணி – கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்!

உலகின் 7 அதிசயங்களையும் 7 நாட்களுக்குள் சுற்றிப் பார்த்த பயணி – கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்!

நம் அன்றாட வாழ்வில் பல அரிய நிகழ்வுகளை செய்தி மூலமாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நாம் காண்கிறோம்! சாதிக்க முடியாத அனைத்தையும் சாதிக்கும் சூப்பர் ஹீரோக்களின் பல நிகழ்ச்சிகளையும் நாம் பார்க்கிறோம்! உலகெங்கிலும் ஒரு சிலர் வழக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை அமைத்துக் கொள்கின்றனர். இங்கு அப்படித்தான் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் உலகின் 7 அதிசயங்களையும் 7 நாட்களுக்குள் பார்வையிட்டு சாதனை புரிந்துள்ளார். இந்த செயலுக்காக அந்த நபருக்கு கின்னஸ் உலக சாதனை வழங்கப்பட்டது. இந்த சாதனை தான் இப்போது 'டாக் ஆஃப் தி டவுன்' ஆக மாறியுள்ளது!

7 wonders

7 நாட்களுக்குள் உலகின் 7 அதிசயங்களுக்கும் சென்ற ஜேமி

'அட்வென்ச்சர்மேன்' என்று இப்போது அழைக்கப்படும் பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி மெக்டொனால்ட், ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்று வெற்றிகரமாக முடித்தார். அவர் சீனாவின் பெருஞ்சுவர், தாஜ்மஹால், பெட்ரா, கொலோசியம், கிறிஸ்ட் தி ரிடீமர், மச்சு பிச்சு மற்றும் சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை சரியாக ஆறு நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் பார்வையிட்டு சாதனை புரிந்துள்ளார். இந்த விஷயம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை, இல்லையா?

பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி சாதனை

உலகின் ஏழு அதிசயங்களை பார்வையிட்ட அவரது நம்பமுடியாத சாதனையை கின்னஸ் உலக சாதனை உறுதிப்படுத்தியது. ஜேமி இந்த இடங்களுக்கு 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் பயணம் செய்தார், மேலும் இங்குள்ள மிகப்பெரிய பிடிப்பு என்னவென்றால், அவர் பொது போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி இந்த இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.

jamiemcdonald colossal

7 நாட்களில் 36780 கிமீ தூரம் பயணம்

மெக்டொனால்ட் தனது முழுப் பயணத்தின்போதும் 13 விமானங்கள், 16 டாக்சிகள், ஒன்பது பேருந்துகள், நான்கு ரயில்கள் மற்றும் ஒரு டோபோகன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நான்கு கண்டங்களில் மொத்தம் 36780 கிமீ தூரம் பயணித்துள்ளார். ஏறக்குறைய ஒரு வார பயணத்தில் அவர் ஒரே ஒரு முறை குளித்ததாகவும், ஒட்டுமொத்தமாக வெறும் 12 மணி நேரம் மட்டுமே உறங்கியதாகவும் கூறுகிறார்.

jamiemcdonald mechu Peru

Travelbag உதவியுடன் பயணம் செய்த ஜேமி

Travelbag ஒரு பிரபலமான பயண நிறுவனம் மற்றும் டிராவல்போர்ட்டின் பங்குதாரர். இந்த டிராவல்போர்ட்டின் பார்ட்னர் நிறுவனத்துடன் ஜேமி தனது பயணத்தை தேர்வு செய்துள்ளார். Travelbag தனது பயணத்தை Travelport ஐப் பயன்படுத்தி ஏற்பாடு செய்து, ஒரு வாரத்திற்குள் உலகின் 7 அதிசயங்களையும் உள்ளடக்கும் வகையில் ஒரு சிறந்த பயணத் திட்டத்தைத் தயாரித்து அவருக்கு கொடுத்தது. அதன்படி ஜேமி இத்தகைய சாதனை பயணத்தை முடித்துள்ளார்.

jamiemcdonald pyramid

ஜேமியின் முழு டிராவல் பிளான் இதோ

1. ஜேமியின் முதல் நாளின் பயணத்தில் சீனாவின் பெரிய சுவர் நோக்கி பயணித்தார்.

2. பின்னர் அங்கிருந்து அவர் தாஜ்மஹாலை பார்க்க இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

3. இந்தியப் பயணத்திற்குப் பிறகு, அவர் ஜோர்டானுக்கு விமானத்தில் ஏறினார். அங்கிருந்து பெட்ரா நகருக்கு சென்றார்.

4. மெக்டொனால்டின் அடுத்த நிறுத்தம் ரோம், அங்கு அவர் கொலோசியத்தைப் பார்வையிட்டார்.

5. அங்கிருந்து உடனே உலகின் மிகப்பெரிய ஆர்ட் டெகோ சிலையான கிறிஸ்ட் தி ரிடீமரைப் பார்வையிட மற்றொரு விமானத்தில் பிரேசிலுக்குச் சென்றார்.

6. பின்னர் அவர் பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சுவை பார்வையிட்டார்.

7. அங்கிருந்து மெக்சிகோவில் உள்ள சிசென் இட்சா இட்சாவுடன் தனது பயணத்தை முடித்தார்.

மருத்துவமனைகளுக்கு நிதி கொடுக்கவே இந்த பயணம்

உலகம் முழுவதும் மெக்டொனால்டின் பயணம் ஒரு சாதனையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இதன் நோக்கம் இல்லை. இந்த பயணத்தின் நோக்கம் சூப்பர் ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதாகும். ஒன்பது ஆண்டுகளாக சிரிங்கோமைலியா என்ற அரிய முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்ட மெக்டொனால்ட், தனது உடல்நல நெருக்கடி முழுவதும் அவருக்கு ஆதரவான மருத்துவமனைகளுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்டி கொடுக்கவே இந்த சாதனையை ஏற்றதாக கூறப்படுகிறது.

More News

    Read more about: travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+