Search
  • Follow NativePlanet
Share
» » தீபாவளிக்காக விலை குறைக்கப்பட்ட விமான டிக்கெட் கட்டணங்கள் - 20-25% தள்ளுபடியில் டிக்கெட் புக் செய்யலாம்!

தீபாவளிக்காக விலை குறைக்கப்பட்ட விமான டிக்கெட் கட்டணங்கள் - 20-25% தள்ளுபடியில் டிக்கெட் புக் செய்யலாம்!

பண்டிகை காலங்களில் ரயில் மற்றும் பேருந்து கட்டணம் விலையுயர்ந்த விற்கப்படுவதை தான் நாம் பார்த்து இருப்போம். ஆனால் இங்கே வித்தியாசமாக தீபாவளி பண்டிகைக்காக உள்ளூர் விமான கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி நீங்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு 20-25% தள்ளுபடியில் விமான டிக்கெட் புக் செய்யலாம் மக்களே!

தீபாவளி சமயத்தில் குறைந்த விமான டிக்கெட்டுகள்

பண்டிகைக் காலத்தில், குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முன்பதாக விமான டிக்கெட்டுகள் விலை அதிகமாக இருக்கும் என்று அறியப்படுகிறது, ஆனால் இந்த ஆண்டு, பயணிகளுக்கு சில நல்ல செய்தி உள்ளது. தீபாவளி மற்றும் சத் பூஜை நெருங்கி வருவதால், பல உள்நாட்டு வழித்தடங்களில் சராசரி விமான கட்டணம் கடந்த ஆண்டை விட 20-25% குறைந்துள்ளது. மேலும் பயணிகள் ஏற்றிச் செல்லும் திறன் அதிகரித்துள்ளதாலும், எண்ணெய் விலையில் சமீபத்திய வீழ்ச்சியாலும் இப்படி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எண்ணெய் விலை குறைந்ததால் வீழ்ந்த விமான கட்டணங்கள்

இந்த பகுப்பாய்விற்கு, பயண போர்டல் ஒரு வழி டிக்கெட்டுகளுக்கான விமான கட்டணத்தை 30 நாள் முன்கூட்டிய வாங்குதலுடன் ஒப்பிட்டது. நவம்பர் 10-16, 2023 மற்றும் அக்டோபர் 28-நவம்பர் 3, 2024 - தீபாவளியை ஒட்டி உள்நாட்டு வழித்தடங்களில் விமானக் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்தனர். ixigo குழுமத்தின் CEO, Aloke Bajpai, கடந்த ஆண்டு, தீபாவளியை ஒட்டி விமானக் கட்டண உயர்வைக் குறிப்பிட்டார். இது முக்கியமாக கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸின் இடைநிறுத்தத்திற்குப் பிறகு, குறைந்த அளவிலான விமானங்களின் திறனால் இயக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு கிட்டத்தட்ட 15% எண்ணெய் விலை குறைந்துள்ளது இந்த தீபாவளி மகிழ்ச்சியைக் கூட்டியுள்ளது.

Airline prices dropped by 20-25 due to Diwali

அதிகரித்த பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன்

இந்த தீபாவளி சீசனில் பல இந்திய உள்நாட்டு வழித்தடங்களில் சராசரி விமானக் கட்டணம் 20-25% குறைந்துள்ளதாக டிராவல் போர்டல் ixigo இன் புதிய அறிக்கை காட்டுகிறது. பகுப்பாய்வின் படி, அதிகரித்த பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் மற்றும் சமீபத்திய எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவை விமான டிக்கெட் விலைகள் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணம்.

எந்தெந்த கட்டணம் குறைந்துள்ளது?

1. பெங்களூரு-கொல்கத்தா விமானத்தில் 38% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கட்டணம் ரூ.10,195 ஆக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு ரூ.6,319 ஆக உள்ளது.

2. அடுத்ததாக சென்னை-கொல்கத்தா, கடந்த ஆண்டு ரூ.8,725ல் இருந்து 36% சரிந்து ரூ.5,604 ஆக கட்டணம் குறைந்துள்ளது.

3. மும்பை-டெல்லி விமானக் கட்டணம் முந்தைய ஆண்டு ரூ.8,788 இல் இருந்து 34% சரிந்து ரூ.5,762 ஆக உள்ளது.

4. டெல்லி-உதய்பூர் விமானமும் ரூ.11,296ல் இருந்து ரூ.7,469 ஆக குறைந்துள்ளது.

5. அதே போல, டெல்லி-கொல்கத்தா, ஹைதராபாத்-டெல்லி மற்றும் டெல்லி-ஸ்ரீநகர் விமானங்களில் 32% சரிவு ஏற்பட்டுள்ளது.

Airline prices dropped by 20-25 due to Diwali

எந்தெந்த வழித்தடங்களில் விமான டிக்கெட் விலை உயர்ந்துள்ளது?

ஆய்வின்படி, அகமதாபாத்-டெல்லி வழித்தடத்தில் விமானக் கட்டணம் 34% உயர்ந்து ரூ.6,533ல் இருந்து ரூ.8,758 ஆகவும், மும்பை-டேராடூன் வழித்தட விமான டிக்கெட் ரூ.11,710ல் இருந்து ரூ.15,527 ஆகவும் உயர்ந்துள்ளதாக அறிக்கை மேலும் கூறியுள்ளது.

நீங்கள் உங்கள் சொந்தஊர்களுக்கு பயணிக்கப் போகிறீர்கள் என்றால், உடனடியாக இந்த தள்ளுபடி விலையை சரிபார்த்து டிக்கெட் புக் செய்து விடுங்கள்!

More News

    Read more about: travel news airline tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+