Search
  • Follow NativePlanet
Share
» »Great holiday booking sites for disabilities 2024: மாற்றுத்திறனாளிகளும் தடையின்றி உலகம் சுற்றலாம்...!

Great holiday booking sites for disabilities 2024: மாற்றுத்திறனாளிகளும் தடையின்றி உலகம் சுற்றலாம்...!

'இயலாமை'(Disability) என்பது மனிதனின் ஒரு பகுதி. ஏறக்குறைய ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இயலாமையை அனுபவிப்பார்கள். உலக மக்கள் தொகையில், 1.3 பில்லியன் மக்கள் அதாவது சுமார் 16 சதவீதம் பேர், தற்போது குறிப்பிடத்தக்க இயலாமையை அனுபவிக்கின்றனர்.

மக்களின் முதுமை, தொற்றா நோய்களின் பரவல் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூகத்தில் மற்றவர்களுடன் சமமாக அணுக முடியாத சூழல்கள், தடைகளை இயலாமையால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்கின்றனர்.

'இயலாமை' என்பது பலதரப்பட்டவை உள்ளன. இவ்வுலகில், ஒரு சிலரால் குறைகளுடன் மற்றவர்களுடன் வாழ முடியும். இன்னும் ஒரு சிலரால் இருந்த இடத்தில் இருந்து, மற்றவர்கள் உதவியின்றி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

அதுபோன்ற நபர்களுடன் இருப்பவர்களும், தங்களுக்கான 'ஆசா பாசங்களை' துறக்க நேரிடுகிறது. இன்றைய நவீன யுகத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று தெரிவித்தாலும், பொது இடங்களில் 'சிறப்பு' வகைக்குட்பட்ட இயலாமையுடன் இருப்பவர்களுக்கு தேவையான வசதிகள் இன்று வரை கிடைப்பதில்லை.

travellerswithdisabilities

நீங்களும் ரசிக்கலாம் அழகை

சமூகத்தில் மற்றவர்கள் போல, உலகம் சுற்ற அவர்களுக்கு ஆசை இருந்தாலும், அதற்கான சூழல் கைவசம் இல்லாமல் போகும். ஆனால், அவர்கள் பொது இடங்களில் எந்த மாதிரியான தடைகளை எதிர்கொள்வர், என்னென்ன தேவை இருக்கும் என்பதை அறிந்து, அவர்களுக்கு உரிய வசதிகளை வழங்கி, சமூகத்தில் மற்றவர்களுடன் மாற்றுத்திறனாளிகளையும் ஆடவும், பாடவும், இயற்கை அழகை ரசிக்கவும் செய்கின்றனர் முன்னணி சுற்றுலா முன்பதிவு தளங்கள்.

வாருங்கள் வெளியே வானம் வசப்படும்.... சிறந்த சுற்றுலா முன்பதிவு தளங்கள்...

handson.travel

செவித்திறன் இன்மை அல்லது செவித்திறன் குறைபாடு சமூகத்தினத்தினருக்கு என,'ஹேண்ட்ஸ் ஆன் டிராவல்' 100 சதவீத நேரம் சைகை மொழியில் தொடர்பு கொள்கின்றனர். இவர்கள் ஏற்படுத்தி தரும் சுற்றுப்பயணங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

அவர்களின் குழுவை, நீங்கள் புக் செய்ய வேண்டுமெனில், மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், மூன்று ஆண்டுகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் குழு பலரால் புக் செய்யப்பட்டுவிட்டன. தாய்லாந்து, எகிப்து, மெக்சிகோ மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு, இக்குழுவினருடன் பயணித்து பாருங்களேன்.

limitlesstravel.org

உண்மை, சுவாரசியம் என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளால் 'லிமிட்லெஸ் டிராவல்' நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், அவர்களுக்கு தெரியும், தாங்கள் எதிர்கொள்ளும், கொண்ட அசெளகரியங்கள், பிறருக்கு ஏற்படாதாவாறு பலவற்றை தானாகவே செய்வர் என்பதில் ஐயமில்லை.

லிமிட்லெஸ் டிராவல் குழுவில் மாற்றுத்திறனாளிகள் இருப்பதால், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் குறைந்த இயக்கம் உள்ளவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் தங்கள் வாடிக்கையாளர் தங்கும் ஹோட்டல், போக்குவரத்து சார்ந்த அனைத்தையும் நேரில் சென்றே கவனித்து கொள்கின்றனர்.

லிமிட்லெஸ் டிராவல் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் தகுதியான பராமரிப்பாளர்களை அழைத்துச் செல்லும் இங்கிலாந்தில் உள்ள ஒரே பயண நிறுவனம் இதுவாகும்.

wheeltheworld.com

எந்த நாடுகளுக்கு சென்றாலும், உங்களுக்கு தேவையான வீல் சேர்களை வழங்குவார்கள் இந்த வீல் தி வேல்டு.காம் நிறுவனம். இதேபோல, கீழே கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சுற்றுலா பயண முன்பதிவு தளங்கள், தங்களுக்கே உரித்தான சிறப்பு தகுதி, சேவைகளை, மாற்றுத்திறனாளிகளும் தடையின்றி உலகையும், அங்கிருக்கும் அழகையும் பார்க்க வசதிகளை வழங்குவதில் போட்டிப்போட்டு கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

Ø accessiblego.com

Ø disabledaccessibletravel.com

Ø healingholidays.com

Ø traveleyes-international.com

Ø responsibletravel.com

Ø 2by2holidays.co.uk

Ø rightrooms.co

இந்த கோடைக்கு நீங்க சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், ஒரு வேளை உங்கள் வீட்டில் மாற்றுத்திறனாளிகள் இருந்தால், அவர்களை புறந்தள்ளிவிட்டு செல்லாதீர்கள். அவர்களையும் உங்களுடன் அழைத்து செல்லுங்கள்... அவர்களும் உலக நாடுகளில் உள்ள அழகை ரசிக்கட்டும் உங்களுடன்... அவர்களுக்கான வசதிகளை, நீங்கள் பார்க்கனும் என்ற எவ்வித நெருடல், சலிப்பு இல்லாமல், அவற்றை மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் பொறுப்பில் விட்டுச் சென்று, வானில் பறக்க தயாராக இருங்க...! இந்தியாவிலும் ஒரு சில நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்குரிய வசதிகளை வழங்குகின்றனர். அதனால், உள்ளூர் சுற்றுப்பயணத்திலும் எவ்வித தயக்கமும் தேவையில்லை.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+